பஷீர் பாட்டையா



http://www.youtube.com/watch?v=gkVreH6GW1w

http://www.youtube.com/watch?v=jM-v9msw9y8

ரொம்ப நாட்களுக்கு முன்பே ஃபேஸ்புக்கில் வைக்கம் முகம்மது பஷீரின் இந்த டாக்குமெண்டரிக்கான லிங்க் கொடுத்திருந்தேன். இப்போது ட்விட்டரில் நண்பர் சுரேஷ் இந்த லிங்குகளைப் போட்டிருந்தார். உலகில் இளையராஜாவைத் தவிர இன்னபிற மனிதர்களும் நண்பர் சுரேஷின் கண்களுக்குத் தட்டுப்படுவார்கள் என்பது எனக்கு இன்றைக்குத்தான் தெரிந்தது. சுரேஷின் புண்ணியத்தில் பஷீரின் டாக்குமெண்டரியை இன்னொரு முறை பார்த்தேன். சிறு வயதிலிருந்தே என் மனதை வெகுவாகக் கவர்ந்த எழுத்தாளர் பஷீர். சென்ற வாரம்தான் அவருடைய ‘ஆனைவாரியும், பொன்குரிசும்’ புத்தகத்தை இன்னொரு முறை படித்தேன். ‘பாத்துமாவுடைய ஆடும், இளம்பருவத்து தோழியும்’ பலமுறை படித்ததுண்டு. ‘சப்தங்கள்’ படித்து அதிர்ந்ததுண்டு. படித்துப் பழகிய எழுத்தின் குரலும், அதன் உருவமும் மனதில் பதிந்தே இருந்தன. இந்தப் படத்தைப் பார்த்ததும், அவை சரியாக என் மனதில் உள்ளவையோடு ஒத்துப் போயின. ரொம்ப நாட்கள் நெருங்கிப் பார்த்துப் பழகிய சொந்தக்காரப் பாட்டையா போலவே என் கண்களுக்குத் தெரிகிறார், பஷீர்.

டாக்குமெண்டரியில் ஒரு சுவாரஸ்யமான இடம்.

‘ஈஸி சேரில் சாய்ந்திருக்கும் பஷீர். தபால்காரர் கடிதம் கொண்டு வந்து கொடுக்கிறார்.

‘என்ன போஸ்ட்மேன்! மணிஆர்டர் கொண்டு வந்து குடுக்க மாட்டீரா?’ என்று கேட்கிறார், பஷீர்.

‘மணிஆர்ட்ர் நாளைக்கு’ என்று சிரித்தபடியே சொல்லிச் செல்கிறார்.

‘ஓ! ரைட்’ என்கிறார், பஷீர்.

Labels: , ,